நானும் ரொம்ப நாளா ஒரு வலைப்பதிவு - அதாங்க இந்த blog, blogநு சொல்லுவாய்ங்களே, அதுதான் - ஒண்ணு ஆரம்பிக்கனும்னு பயங்கரமா ஒசிச்சு இத்த ஆரம்பிச்சேய்ந். எப்பந்தெரியுமா? போன வருஷம்! அத்தோட செரி. ஒரு புள்ளி கூட அப்பறமா வெக்கலை. ஆனா இப்படியிருந்த என்ன எப்படியாவது ரெகுலரா பண்ணனும்னு தூண்டினது Kakiயோட blog தான். Kaki, என் தம்பி தங்கக்கம்பி! பாக்க கொஞ்சம் 'ஒல்லி'யா இருந்தாலும், படு 'கில்லி'! (அட நமக்கும் rhyminga எழுத வருதே!!) சில பேர் நிறையா சிரிப்பாய்ங்க. அடுத்தவங்களையும் நிறைய சிரிக்க வெப்பாய்ங்க. Kakiயும் அப்படி ஒரு கேரக்டர்தான். இதனாலேயே அவன எனக்கு ரொம்ப புடிக்கும். ஒவ்வொரு தடவை அவனோட ப்ளாக பாக்கும்போதும், அவனோட களர்புல்லான, காமெடியான, கலகக்ல்சான பதிவுகள படிக்கும்போதும் நாமளும் இதுமாதிரி பதியணும்னு தோணும். அவனோட blog எனக்கு ஒரு Inspiration. உனக்கு ஒரு thanksடா தம்பி! உன் பேர காப்பாத்தற அளவுக்கு என்னோட ப்ளாக டெவலப் பண்ண நிச்சயமா ட்ரை பண்றேன். அவனோட ப்ளாக புரட்டும் போது திடீர்னு கண்ணுல பட்டது - அட நம்ம விஜய்யோட போடோ! அவரும் ஒரு blog ஆரம்பிச்சுருக்கார். அதப்படிச்சதுநால...